Enable Javscript for better performance
மாணவர் கூர்நோக்கு பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஆங்கிலத் துறை மாணவ, மாணவிகள் பங்கேற்ற கூர்நோக்கு பயிலரங்கம் பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
    கலைப்புல முதல்வர் இ.செல்வராஜன் தலைமை வகித்து, பயிலரங்கை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இளைஞர்கள் சமூக நலப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆங்கிலத் துறைத் தலைவர் கே.ராஜாராமன் வரவேற்றார். பொருளாதாரத் துறைத் தலைவர் ஜி.ரவி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
    சிறப்பு விருந்தினராக கொடைக்கானல் அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.ஜெயப்பிரியா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கூர்நோக்கு பயிற்சி அளித்தார். அவர் பேசுகையில், செஞ்சிலுவைச் சங்கத்தின் தோற்றம்; வளர்ச்சி; நோக்கம் பற்றியும், உலகளாவிய அதன் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். அனைத்து பிரச்னைகளுக்கும் அன்பே தீர்வாக அமையும் என்றார். 
    பயிற்சி அமைப்பாளர் எஸ்.ஐயப்பராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியில், அறிவியல் துறைத் தலைவர் தேவநாதன், ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்கள் எஸ்.கார்த்திகுமார், ஜி.அற்புதவேல்ராஜா, பி.கார்த்திகேயன், எம்.செளந்தரராஜன் , திட்ட அலுவலர்கள்  ஹெச்.மணிகண்டன், கலை மற்றும் 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai