Enable Javscript for better performance
ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    இலங்கியனூரில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
    வேப்பூர் அருகே உள்ள இலங்கியனூர் வழியாக சேலம் -  விருத்தாசலம் ரயில்வே பாதை செல்கிறது. இந்த ரயில் பாதையைக் கடந்து தான் வலசை, பிஞ்சனூர் உள்பட பல்வேறு கிராம மக்கள் சென்று வர வேண்டியுள்ளது. 
    ரயில் போக்குவரத்து அதிகமுள்ள இந்தப் பாதையில், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்துச் செல்ல வேண்டியுள்ளது. 
    இதனால் விபத்து அபாயம் தொடர்வதால், ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    இதையடுத்து, தெற்கு ரயில்வே துறை உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன், வேப்பூர் வட்டாட்சியர் செந்தில்குமார், துணை வட்டாட்சியர் ஜெயசீலன்,  கிராம நிர்வாக அலுவலர் அருண் ஆகியோர் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க வாய்ப்புள்ள இடங்களை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
    இதில், சுரங்கப் பாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai