Enable Javscript for better performance
வருவாய்த் துறையினர் 2-ஆவது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வருவாய்த் துறையினர் 2-ஆவது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாட்டத்தில் வருவாய்த் துறையினர் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    அரசு ஊழியர்களுக்கு 21 மாத ஊதியக்குழு நிலுவையை வழங்க வேண்டும், துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. 
    இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இரண்டு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி, இரண்டாம் நாளாக வியாழக்கிழமை மாவட்டம் முழுவதிலும் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை 373 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு பிரிவுகளில் குறைவான ஊழியர்களே வந்திருந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. எனினும், மற்ற சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai