Enable Javscript for better performance
வள்ளலார் தெய்வ நிலைய உண்டியல் காணிக்கை ரூ.19.5 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் மற்றும் அதைச் சார்ந்த தலங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.19.53 லட்சம் காணிக்கையாகப் பெறப்பட்டது.
    கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தில் கடந்த ஜன.31-ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். தைப்பூச விழாவையொட்டி, வள்ளலார் தெய்வ நிலையம், மருதூர், கருங்குழி சந்நிதி, மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் ஆகிய பகுதிகளில் நிரந்தரம் மற்றும் தாற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன.
    வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இதில், தாற்காலிக உண்டியல் மூலம் ரூ.5,98,469, நிரந்தர உண்டியல் மூலம் ரூ.5,08,532, திருப்பணி உண்டியல் மூலம் ரூ.3,71,437 கிடைத்தது. தொடர்ந்து வியாழக்கிழமை மருதூர் சந்நிதி உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.68,606, கருங்குழி சன்னதியில் ரூ.51,832, மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ரூ.3,54,475 காணிக்கையாக பெறப்பட்டது. ஆக மொத்தம் ரூ.19,53,351 காணிக்கையாகப் பெறப்பட்டது.
    இந்து சமய அறநிலையத் துறை கடலூர் மாவட்ட உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி தலைமையில், பண்ருட்டி ஆய்வாளர் ஜெயசித்ரா, வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலர் ஆர்.கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் சுய  உதவிக் குழுவினர், கிராம மக்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai