Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை  வலியுறுத்தி   "108' ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் கடலூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு முதல் "108' ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் அமலாகி வருகிறது. இதில் சுமார் 4,300 பேர் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களுக்கு 2017-ஆம் ஆண்டு வருடாந்திர ஊதிய உயர்வுக்காக தமிழக அரசு அளித்த பணத்தை, இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வரும்  நிர்வாகத்தினர் முழுமையாக தொழிலாளர்களுக்கு வழங்கவில்லையாம். 
    எனவே, அரசால் வழங்கப்பட்ட தொகையை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்புக்கான பணத்தை ஒப்பந்தப்படி அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பி.குமார் கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் ரா.ராஜேந்திரன், பிரேம், குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணைச் செயலர் எம்.அருள்தாஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai