கடலூர் பகுதியில் மழை
By கடலூர், | Published on : 11th July 2018 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடலூர் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கடலூரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. அதே நேரத்தில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்பட சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் அந்தப் பகுதியில் நெல், பயறு வகைப் பயிர்களை நடவு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.