சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
   அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா தலைமை வகித்தார். பண்ருட்டி நகர அமைப்பாளர் ஆர்.அன்பு, ஒன்றியத் தலைவர்கள் எஸ்.லட்சுமணன் (பண்ருட்டி), வீராசாமி(அண்ணாகிராமம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் நகரத் தலைவர் அன்பு வரவேற்றார். புதுச்சேரி மாநிலத் தலைவர் கி.மஞ்சினி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் கே.பாலாஜி, கடலூர் மாவட்ட பொதுச் செயலர் ஆர்.சரவணன், மாவட்டச் செயலர் சத்தியமூர்த்தி, பொருளாளர் புருஷோத்தமன், அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.
   கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி வட்டம், எனதிரிமங்கலம், ஒறையூர் பகுதிகளில் மணல் குவாரி அமைக்க உள்ளதாகத் தெரிய வருகிறது. விவசாயத்தையும், நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதிக்கும் இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும், பாலத்தின் இருபுறங்களிலும் அணுகுச் சாலை அமைக்காததால் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அணுகுச் சாலையை விரைந்து அமைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai