சுடச்சுட

  

  மணியரசன் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  By  சிதம்பரம்,  |   Published on : 14th June 2018 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீதான தாக்குதலைக் கண்டித்து, சிதம்பரம் காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 10.6.2018 அன்று தஞ்சையில் தாக்குதல் நடத்தினர்.
   இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், பெ.மணியரசன் மற்றும் அரசியல் இயக்கத் தலைவர்களுக்கு காவல் துறை தக்க பாதுகாப்பை வழங்கக் கோரியும் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   ஆர்பாட்டத்துக்கு தமிழக இளைஞர் முன்னணியின் தமிழக துணைப் பொதுச் செயலர் தோழர் ஆ.குபேரன் தலைமை வகித்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மு.முருகவேள், அ.மதிவாணன், மா.கோ.தேவராசன், பா.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பால.அறவாழி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் பெரு.திருவரசு, சிதம்பரம் நகரச் செயலர் ஆதிமூலம், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலர் தெ.ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணியின் மாணவரணி அமைப்பாளர் ஜெயபிரகாசு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடுதலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
   ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய பேரியக்க நிர்வாகிகள் சிவ.அருளமுதன், அ.கலைச்செல்வன், இரா.எல்லாளன், சோ.கார்த்திகேயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பெரு.சரித்திரன், நாம் தமிழர் கட்சியின் கோ.தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேந்தன் சுரேஷ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai