Enable Javscript for better performance
அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடலூரில் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
     தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் அதில் எவரையும் உடனடியாகக் கைது செய்யக் கூடாது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு  முன்பிணை வழங்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டால்  அவரை பணி நியமனம் செய்த அதிகாரியின் ஒப்புதல் பெற்றுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாம். 
     இந்த தீர்ப்பைக் கண்டித்து கடலூரில் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் இணைந்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சசி மனித உரிமை அமைப்பு இரா.பாபு தலைமை வகித்தார். அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு மு.மருதவாணன்  முன்னிலை வகித்துப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் இல.திருமேனி வரவேற்றார். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் தொடக்க உரை நிகழ்த்தினார்.
     விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் கண்டன உரை
    நிகழ்த்தினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகர், விசிக மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், திமுக நகரச் செயலர் கே.எஸ்.ராஜா,  மதிமுக வெளியீட்டு அணி செயலர் வந்தியதேவன், தவாக மாவட்டச் செயலர் த.ஆனந்த், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் கல்யாணி, மீனவர் விடுதலை வேங்கை இணைப் பொதுச் செயலர் கோ.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai