Enable Javscript for better performance
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தனியார்  வங்கி சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
    வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனுப்பும் பணத்தை இந்தியப் பணமாக மாற்றி வழங்கும் யு.ஏ.இ. எக்ஸ்சேஞ்ச் வங்கி கடலூரில் இயங்கி வருகிறது. 
    இந்த வங்கி தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், குள்ளஞ்சாவடி அருகே உள்ள திம்மரவுதம்குப்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பாச்சாரப்பாளையம் அரசுத் தொடக்க பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை புதன்கிழமை வழங்கியது.
    அந்த வங்கியின் சென்னை மண்டல மேலாண் இயக்குநர் பி.சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று இரு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், புத்தகப் பைகள், கல்வி உபகரணங்களை வழங்கினார்.  
    நிகழ்ச்சியில் வங்கியின் மண்டலத் தலைவர் ஜித்தேந்திரபாபு, கடலூர் கிளை மேலாளர் சே.சுந்தர் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai