Enable Javscript for better performance
அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அரசு அலுவலர்களுக்கான இரண்டு நாள் ஆட்சி மொழிப் பயிலரங்கம்  அண்மையில் நடைபெற்றது. 
    அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் தங்களது கோப்புகளை தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி தயாரிக்க வேண்டும், அலுவல் நடைமுறைகளில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான இரு நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா தலைமை வகித்தார் பேசினார்.
    நிகழ்வுகளில், 100-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆட்சிமொழி வரலாறு மற்றும் சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், மொழிப் பயிற்சி, மொழி பெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழி ஆய்வு மற்றும் குறைகளைவு நடவடிக்கைகள் என்றத்  தலைப்புகளில் பயிலரங்கம் நடத்தப்பட்டது.  கடலூர் சி.கே. பொறியியல் கல்லூரித் தாளாளர் சி.கே.அசோக்குமார், தமிழ்ப் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் ஆகியோர் கருத்துரையாற்றினர். ஆட்சித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கியதற்காக மாவட்ட மைய நூலக அலுவலகத்துக்கு கேடயம் ,  சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) க.பவானி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai