Enable Javscript for better performance
ஆற்றில் மணல் அள்ளிய 2 லாரிகள் சிறைபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 லாரிகளை அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனர். 
    பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு கடத்தப்படுவதாக அந்தப் பகுதியினருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலையில் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கிராம மக்கள் பெண்ணாடம் ரயில்வே மேம்பாலம் அருகே காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லாரிகளை மடக்கிப் பிடித்து, திட்டக்குடி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.   இந்த லாரிகளில் சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் செல்வது போல தார்பாய்களால் மூடி நூதன முறையில் மணல் கடத்தியது தெரியவந்தது. இந்த பகுதியில் இரண்டு சிமென்ட் ஆலைகள் உள்ளதால் தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதுபற்றி வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai