Enable Javscript for better performance
ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    என்எல்சி இன்கோ சர்வ் தொழிலாளர்களும் வாக்களிக்கும் வகையில் கூட்டுறவுத் தேர்தலை நடத்தக் கோரி, என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் (ஏஐடியுசி) நெய்வேலி கடை வீதி காமராஜர் சிலை அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    சங்கத்தின் சிறப்புத் தலைவர் என்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் ஏ.அந்தோணி செல்வராஜ், பொதுச் செயலர் ஆர்.செல்வமணி, பொருளாளர் வி.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    என்.எப்.டி.சி.எல். மாநிலச் செயலர் எஸ்.ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் எம்.சேகர் கண்டன உரை நிகழ்த்தினார்.
    ஆர்ப்பாட்டத்தில், அனைத்து இன்கோ சர்வ் தொழிலாளர்களும் வாக்களிக்கும் வகையில் கூட்டுறவு தேர்தலை நடத்த வேண்டும். குறுக்கு வழியில் இயக்குநர்களை தேர்வு செய்யக் கூடாது. தனியார் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து, அனைவரையும் சொசைட்டியில் இணைக்க வேண்டும். 
    இரண்டு ஆண்டுகளாக வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பஞ்சப்படியை வழங்க வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு காலம் கடத்தக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். 
    பிரசார செயலர் சி.முனியன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai