Enable Javscript for better performance
ஏரியில் மூழ்கி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலி அருகே ஏரியில் மூழ்கிய கல்லூரி மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
     நெய்வேலி வட்டம் 4-இல் வசிப்பவர் ராஜேந்திரன். என்எல்சி இந்தியா நிறுவன நிரந்தரத் தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன் (23), பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு (பி.இ) இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், 4 நாள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த மணிகண்டன், வெள்ளிக்கிழமை காலை தனது நண்பர்களுடன் நெய்வேலி அருகே உள்ள சாம்பல் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளார். ஏரியில் குளித்தபோது, மணிகண்டன் திடீரென நீரில் மூழ்கினார். சக நண்பர்கள் அவரை மீட்டு என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அங்கு  மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெர்மல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai