Enable Javscript for better performance
காவிரி: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பாமக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் அந்தக் கட்சியினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். 
     இதுகுறித்து கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து முதல்கட்டமாக விவசாயிகள், பொதுமக்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார். 
    கட்சி சார்பற்றோர்: இதேபோல, சிதம்பரத்தில் கட்சி சார்பற்ற பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்தும், தமிழகத்தில் ஹைச்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் சிதம்பரம் கண்ணங்குடி சாலையில் அந்தப் பகுதி மக்கள் சுமார் 20 வீடுகளில் கருப்புக் கொடியேற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai