Enable Javscript for better performance
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாம் தமிழர் கட்சியின் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி சார்பில், கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் சத்திரம் நான்கு முனைச் சந்திப்பு அருகே அண்மையில் நடைபெற்றது.
     கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா தலைமை வகித்தார். நெய்வேலி நகரச் செயலர் பெரியார் பேரன் தொடக்க உரை நிகழ்த்தினார். தொகுதி பொறுப்பாளர்கள் சாரங்கபாணி,  முத்து அசோகன், முருகேசன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினர். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில், மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி ஆகியோர்  சிறப்புரையாற்றினர். 
     ஏற்பாடுகளை டேவிட் பிரகாஷ், கலையரசன், அருண்பிரகாஷ், தனசேகரன், அறிவுக்கரசன் ஆகியோர் செய்திருந்தனர். தொகுதிச் செயலர் வீரமணி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai