Enable Javscript for better performance
பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறை சார்பில், பல்கலைக்கழக மானியக் குழு நிதி உதவியுடன் இரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
    கருத்தரங்க தொடக்க விழாவில் பேராசிரியர் ஆர்.ஞானதேவன் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் தலைமை வகித்துப் பேசினார்.  
    தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி தொடக்கவுரை ஆற்றினார்.  பதிவாளர் கே.ஆறுமுகம் கருத்துரையாற்றினார். முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் கானூர்  கே.பாலசுந்தரம், கல்வியியல் புல முதல்வர் ஆர்.பாபு, கல்வியியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் எம்.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். 
    பிரெஞ்ச் நாட்டைச் சார்ந்த முனைவர் லூர்து திருவான்சியம் லூயிஸ் மற்றும் பேராசிரியர் சேவியர்  ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்வியியல் துறை இணைப் பேராசிரியர் வி.அம்பேத்கர் நன்றி கூறினார். 
    முன்னாள் கடல்வாழ் அறிவியல் புல முதல்வர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் டி.பாலசுப்ரமணியன்  நிறைவுரையாற்றினார். கலைப்புல முதல்வர் இ.செல்வராஜன் நிறைவு விழாவில் சிறப்புரை ஆற்றினார். 
    கருத்தரங்கில் இந்தியா மற்றும் வெளி நாடுகளைச் சார்ந்த சுமார் 350 பேர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai