Enable Javscript for better performance
மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி, கடலூரில் ஜைனர்களின் ஊர்வலம் நடைபெற்றது.
    ஜைன மதத்தைத் தோற்றுவித்தவரான மகாவீர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் உள்ள ஸ்ரீசிந்தாமணி பாரஸ்நாத் ஜெயின் கோயில் சார்பில் அகிம்சை ஊர்வலம் நடைபெற்றது. கோயிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஜைனர்கள் ஆடல், பாடலுடன் பங்கேற்ற இந்த ஊர்வலம் சன்னதி தெரு, தேரடி வீதி, சுப்புராயலு தெரு, சஞ்சீவிராயன் தெரு, தண்டபாணி தெரு வழியாகச் சென்று மீண்டும் கோயிலில் நிறைவடைந்தது.  இதையடுத்து ஜைனர் சமூகத்தினர்  மாற்றுத் திறனாளிகளுக்கும், ஏழை மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலும் அன்னதானம் வழங்கினர். பிற்பகலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பஜனைகள் நடைபெற்றன.  அப்போது உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர்.  மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai