Enable Javscript for better performance
மணல் கடத்தல்: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தியதாக இருவர் கைதுசெய்யப்பட்டனர். 
     பெண்ணாடம் பகுதியில் செல்லும் வெள்ளாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளிலும், லாரிகளிலும் சிலர் மணல் அள்ளுவதாக அந்தப் பகுதி மக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியருக்கு புகார் அளித்தனர். அதன் பேரில் வியாழக்கிழமை கோட்டாட்சியர் 
    சந்தோஷிணி சந்திரா தலைமையில் வருவாய்த் துறையினர் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 
     அப்போது வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 மாட்டுவண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக, அரியலூர் மாவட்டம், முள்ளுக்குறிச்சியை சேர்ந்த கலியமூர்த்தி (56), ஆதனக்குறிச்சியை சேர்ந்த சு.பன்னீர்செல்வம் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai