Enable Javscript for better performance
வாகனம் மோதியதில் புதுவை காவல் துறை அதிகாரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில், புதுவை மாநில காவல் துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
     புதுவை மாநிலம், நெல்லித்தோப்பு பவள நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (54) 
    . இவர், அந்த மாநில காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிந்தார். 
    இவர் வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது நண்பர் ராமமூர்த்தியுடன் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.
     கடலூர் செம்மண்டலம் அருகே வந்தபோது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமுற்ற இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் கிருஷ்ணராஜ் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராமமூர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார். 
     விபத்து குறித்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai