Enable Javscript for better performance
வடலூர் சபையில் சாது மீது தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    வடலூர் சபையில் சேவையாற்றி வரும் சாது மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
     வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருப்போருக்கு தொண்டு செய்யவும், உணவு தயாரிப்பு, பராமரிப்பு பணிக்காகவும், வள்ளலாரின் கொள்கையை பரப்பவும் பலர் இந்த மடத்தில் சாதுக்களாக தங்கியுள்ளனர்.
     அவ்வாறு தங்கியிருக்கும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தேவேந்திரன் (48) என்பவர் சிலரால் தாக்கப்பட்டதாகக் கூறி வியாழக்கிழமை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     இதுகுறித்து திருவண்ணாமலையைச் சேர்ந்தவரும் மடத்திலுள்ள மற்றொரு சாதுவான ஹரிகிருஷ்ணன் (36) கூறியதாவது: சத்திய தருமசாலையில் மலேசியா இல்லத்தில் 13 சாதுக்கள் தங்கியிருக்கிறோம். புதன்கிழமை இந்த இல்லத்துக்குள் சிலர் புகுந்து, அங்கிருந்தவர்களை வெளியேறிச் செல்லுமாறு மிரட்டினர். அப்போது அங்கிருந்தவர்கள் வெளியேறிய நிலையில், அன்னதான கூடத்திலிருந்து இல்லத்துக்கு திரும்பிய சாது தேவேந்திரனை அவர்கள் தாக்கினர். இதில் அவருக்கு கண் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தப் பிரச்னை தொடர்பாக வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
     மடத்தினுள் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைத்தது, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவர்கள் மீது கோயில் செயல் அலுவலர் கருணாகரன் அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு சாதுக்களே காரணமென கருதிய சிலர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai