Enable Javscript for better performance
23-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
     இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மே மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வருகிற புதன்கிழமை (மே 23) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு அரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். கூட்டத்தில், கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், காலை 10.15 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.
     இந்தக் குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிப்பர். மேலும், தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அதில் ஆட்சியர் கேட்டுக்கொண்டார். கடந்த காலங்களில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற நிலையில், தற்போது புதன்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai