நிலவேம்புக் குடிநீர் விநியோகம்

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக, பண்ருட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் அண்மையில் வழங்கப்பட்டது.

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக, பண்ருட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் அண்மையில் வழங்கப்பட்டது.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, கட்சியின் நகரச் செயலர் வேல்முருகன் தலைமை வகித்தார். பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதிச் செயலர் வெற்றிவேலன் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். 
தொகுதி பொருளாளர்  சக்திவேல், அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் (நடுவண்) இன்பன், பண்ருட்டி ஒன்றியச் செயலர் மகாதேவன், அண்ணாகிராமம் ஒன்றிய துணைத் தலைவர் மணிவண்ணன், தங்கராசு, ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல, நெய்வேலி ஆர்ச் கேட் அருகே ரைசிங் யூத்ஸ் பவுண்டேசன் இந்தியா, ரெஸ்ட் தொண்டு நிறுவனம்  சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.  ரைசிங் யூத்ஸ் பவுண்டேஷன் இந்தியா சேவை அமைப்பின் நிறுவனத் தலைவர்  பி.கே.ரேவந்த் ஆண்டனி தலைமை வகித்தார். பெளத்த தமிழ் சங்க ஒருங்கிணைப்பாளர் அஞ்சா.ராஜேந்திரன், வெங்கட்பிரபு, சமூக ஆர்வலர் ஹென்றிதாஸ், ரெஸ்ட் நிறுவன தன்னார்வத் தொண்டர் சுப்பிரமணியன், தாஸ்,  மரியதாஸ், லெனால் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மருத்துவர் க.ராமாமிர்தம்  கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.  நிகழ்ச்சியை ரெஸ்ட் தொண்டு நிறுவனத் தலைவர் பவுல்ராஜ் ஒருங்கிணைத்தார். வீராசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com