மருத்துவப் படிப்புக்கு தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு

மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா அண்மையில்  நடைபெற்றது.

மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா அண்மையில்  நடைபெற்றது.
இந்தப் பள்ளி மாணவர்கள் ஜெ.விஜயபாரதி, ஆர்.மனோஜ்பிரவீன், ஜெரிஷ் சி.ஜான், ஜி.முத்துகார்த்திகா, ஆர்.மிதுவர்ஷினி ஆகியோர் நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பாராட்டு விழா பள்ளியில்  நடைபெற்றது. பள்ளி நிறுவனர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். கொள்ளிடம் டாக்டர் எம்.முருகேசன், குழந்தைகள் நல மருத்துவர் எம்.முருகேசன், அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று மாணவர்களை பாராட்டினர் (படம்). 
இந்த மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவி எல்.அகிலா செந்தில்குமார் சார்பில் ஸ்டெதஸ்கோப், மருத்துவ உடை ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கூடுதல் கல்வி செயலர் எஸ்.கஸ்தூரி, பள்ளி முதல்வர் கோ.சக்தி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சி.ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்.மிதுவர்ஷினி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com