பயிர்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

பண்ருட்டி வட்டாரத்தில் சம்பா பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பெறுமாறு வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ் கேட்டுக்கொண்டார்.

பண்ருட்டி வட்டாரத்தில் சம்பா பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பெறுமாறு வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள பூங்குணம், சிறுகிராமம், மாளிகம்பட்டு, விசூர், அங்குசெட்டிப்பாளையம், வீரப்பெருமாநல்லூர், திருவதிகை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். 
பொதுவாக புரட்டாசி, ஐப்பசி மாத காலங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் விவசாயிகள் தங்களுடைய நெல் பயிர்களுக்கு பாரத பிரதமரின் பயிக் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து காப்பீடு செய்து பயன்பெற
லாம்.
மழை இல்லாமல் பயிர் வெயிலில் கருகினால் அல்லது அளவுக்கு அதிகமாக மழை பெய்து வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்தால் மட்டுமே பயிர்க் காப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். கடந்த காரிப் பருவத்தில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்கள் அதிக மழை பெய்து வெள்ளத்தால் சேதமடைந்தன. 
அந்தப் பகுதியில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும். காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்காது.
எனவே, விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.405 வீதம் எத்தனை ஏக்கர் பயிர் செய்துள்ளீர்களோ அதனை காப்பீடு செய்து வைப்பது நல்லது. 
பயிர்க் கடன் வாங்கும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். கடன் பெறாத விவசாயிகள் சம்பா மற்றும் ரபி பருவத்தில் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அருகில் உள்ள தேசிய வங்கி, கூட்டுறவு, மத்திய அரசின் அனுமதி பெற்ற சிஎஸ்சி பொது சேவை மையத்தில் பயிர்க் காப்பீடு தொகையைச் செலுத்தலாம். 
மேலும், இதுதொடர்பாக விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மைத் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com