காரில் மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞர் கைது

காரில் மதுப் புட்டிகளைக் கடத்திய இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

காரில் மதுப் புட்டிகளைக் கடத்திய இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
 கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ரா.வேதரத்தினம் தலைமையில், மதுவிலக்கு தனிப்படை இயங்கி வருகிறது. இந்தப் படையினருக்கு புதுவையிலிருந்து காரில் கடலூருக்கு மதுப் புட்டிகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், காவல் ஆய்வாளர் லதா, காவலர்கள் முத்துக்குமரன், குகன், குமார் ஆகியோர் கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் புதன்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
 அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காரை மடக்கி சோதனையிட்டதில் 87 அட்டைப் பெட்டிகளில் மதுப் புட்டிகள் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், பல்வேறு வகையான 4,056 மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, காரை ஓட்டி வந்த சம்பாரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகன் மணிமாறன் (27) கைதுசெய்யப்பட்டார். அவர் ஓட்டி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. யாருக்காக மதுப் புட்டிகள் கடத்தப்பட்டது என மதுவிலக்கு அமலாக்கப் 
பிரிவினர் விசாரணை நடத்தி 
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com