கால்நடைப் பாதுகாப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி வட்டம், கல்குணம் கிராமத்தில் கால்நடைப் பாதுகாப்பு திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி வட்டம், கல்குணம் கிராமத்தில் கால்நடைப் பாதுகாப்பு திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது.
 நகரங்களில் இருந்து தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற தொலைதூர கிராமங்களை கண்டறிந்து அங்கு ஆண்டுக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது வழக்கம்.
 அதன்படி, குறிஞ்சிப்பாடி கால்நடை மருத்துவர் வித்யாசங்கர் தலைமையிலான குழுவினர் கல்குணம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமை அண்மையில் நடத்தினர்.  முகாமில் 100-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளுக்கு குடல்புழு நீக்கம், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com