ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்தது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் கோ.மாதவன் வெளியிட்ட அறிக்கை: ஆழமற்ற கடல் பகுதிகளிலும், கரைப் பகுதியிலும் கச்சா எண்ணெய், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுப்பதற்கு தமிழகத்தில் 2 இடங்களில் வேதாந்தா நிறுவனத்துக்கும், நிலப் பகுதிகளில் ஒஎன்ஜிசி நிறுவனத்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த திட்டம் தேசத்தின் நலன், மக்கள் நலன் சார்ந்ததல்ல. தமிழகத்தில் மரக்காணம் முதல் கடலூர் வரையிலும், பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி வரையிலும் உள்ள இரண்டு மண்டலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் டெல்டா மண்டலத்தை ரசாயன மண்டலமாக மாற்றிட மத்திய அரசு வகை செய்துள்ளது. இதனால் விவசாயம், மீன்வளம் அழிவுக்கு உள்ளாகும். எனவே, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயம் சங்கம், அனைத்து விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மீனவர் அமைப்பு சார்பில் வருகிற 15-ஆம் தேதி கடலூர், சிதம்பரம் கோட்டாட்சியர்கள் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இதில், அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டுமென அதில் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com