"இந்திய சுரங்கங்களில் விபத்து விகிதம் குறைந்து வருகிறது'

இந்திய சுரங்கங்களில் விபத்து விகிதம் குறைந்து வருவதாக மத்திய சுரங்கப் பாதுகாப்பு இயக்கக துணைப் பொது இயக்குநர் உத்பல் சாகா கூறினார். 

இந்திய சுரங்கங்களில் விபத்து விகிதம் குறைந்து வருவதாக மத்திய சுரங்கப் பாதுகாப்பு இயக்கக துணைப் பொது இயக்குநர் உத்பல் சாகா கூறினார். 
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம், தமிழ்நாடு சுரங்கப் பாதுகாப்பு சங்கம் சார்பில், மாநில அளவிலான சுரங்கப் பாதுகாப்பு வார விழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் நிறைவு நாள் விழா லிக்னைட் அரங்கில் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவன நிதித் துறை இயக்குநரும், பொறுப்பு தலைவருமான ராக்கேஷ் குமார் தலைமை  வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட  மத்திய சுரங்கப் பாதுகாப்பு இயக்ககத்தின் பெங்களூரு மண்டல துணைப் பொது இயக்குநர் உத்பல் சாகா பேசியதாவது: 
சுரங்கப் பாதுகாப்புத் துறையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விபத்தில்லா உற்பத்தியை அடைய முடியும். இந்திய சுரங்கங்களில் விபத்து சதவீதம் குறைந்து வருகிறது என்றார் அவர். 
நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநர்கள் வி.தங்கபாண்டியன், ஆர்.விக்ரமன், செயல் இயக்குநர் எஸ்.எப்.காலித், ஹேமந்த் குமார், சென்னை மண்டல சுரங்கப் பாதுகாப்புத் துறை இயக்குநர் பி.பி.சிங், துணை இயக்குநர் ஷியாம் மிஸ்ரா, ஹைதராபாத் மண்டல இயந்திரவியல் துறை சுரங்கப் பாதுகாப்பு இயக்குநர் கே.விஜயகுமார், பெங்களூரு மண்டல மின்னியல் துறை சுரங்கப் பாதுகாப்புத் துணை இயக்குநர் மெருகு ரகு, தமிழ்நாடு சுரங்கப் பாதுகாப்பு சங்கச் செயலர் பி.ராமசாமி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். 
விழா மலரை உத்பல் சாகா வெளியிட, முதல் பிரதியை ராக்கேஷ் குமார் பெற்றுக் கொண்டார். சுரங்கத்தில் ஆண்டு முழுவதும் விபத்தின்றி பணிபுரிந்தமைக்கான ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்குரிய விருது, முதல்பரிசு நெய்வேலி முதல் சுரங்கத்துக்கும், இரண்டாவது பரிசு சுரங்கம்-1ஏ-வுக்கும் வழங்கப்பட்டது.  
பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு லிக்னைட் அரங்கில் பாதுகாப்பு கண்காட்சியும் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com