புவனகிரி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
By சிதம்பரம், | Published on : 14th September 2018 08:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புவனகிரி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா (படம்) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட கீரப்பாளையம் காமராஜ் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி தமிழரசு சம்பந்தம் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். விழாவுக்கு மாவட்ட ஆளுநர் மணிமாறன் தலைமை வகித்தார். துணை ஆளுநர் நடனசபாபதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பத்மநாபன், சுப்பிரமணிய பாரதியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.