71 கிலோ லட்டு பிள்ளையார் பிரதிஷ்டை!

கடலூரில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் 71 கிலோ எடை கொண்ட லட்டு பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

கடலூரில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் 71 கிலோ எடை கொண்ட லட்டு பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
 ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (58), விஜய் (50), வினய் (48). இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடலூரில் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிரம்மாண்டமான லட்டு பிள்ளையார் தயாரித்து, சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
 அதன்படி நிகழாண்டு, சதுர்த்தி நாளான வியாழக்கிழமை 71 கிலோவில் லட்டு பிள்ளையாரை தங்களது கடையில் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடத்தினர்.
 இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மக்களின் வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் லட்டு பிள்ளையார் வழிபாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு 71 கிலோ எடையில் லட்டு பிள்ளையார் செய்துள்ளோம். 15 பேர் கொண்ட குழுவினர் 3 நாள்களாக இதை உருவாக்கினர்.
 30 கிலோ கடலை மாவு, 35 கிலோ சர்க்கரை, 20 கிலோ நெய், 3 கிலோ முந்திரி, 2 கிலோ திராட்சை, கால் கிலோ ஏலக்காய் ஆகிய பொருள்களை பயன்படுத்தி லட்டு பிள்ளையாரை உருவாக்கி உள்ளோம். 3 நாள்களுக்கு பிறகு லட்டு பிள்ளையார் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com