சுவாமி விவேகானந்தர் பேருரை தினவிழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில், சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் ஆற்றிய பேருரையின் 125}ஆவது ஆண்டு தின விழா அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில், சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் ஆற்றிய பேருரையின் 125}ஆவது ஆண்டு தின விழா அண்மையில் நடைபெற்றது.
சிறப்பு சொற்பொழிவாளர் ஏ.இளங்குமார் சம்பத் பங்கேற்று உரையாற்றினார். 
அவர் பேசுகையில், தேச பக்தி, ஒற்றுமையுடன் வாழுதல், விஞ்ஞானத்தின் முக்கியத்துவம், இந்தியாவின் மெய்ஞான அறிவு, இந்தியர்களின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். 
இந்தியாவின் கலாச்சாரம் பற்றி சுவாமி விவேகானந்தர் பேசியதையும் குறிப்பிட்டார்.   முன்னதாக வேளாண்மைத் துறையின் முன்னாள் புல முதல்வர் எம்.ரவிச்சந்திரன் வரவேற்றார். 
பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும், மேலாண்மை துறை பேராசிரியருமான ந.பஞ்சநதம் விழாவுக்கு  தலைமை வகித்துப் பேசுகையில், பல்கலைக்கழகத்தின் பெருமைகளையும், விவேகானந்தரின் சிகாகோ பேருரையின் முக்கிய குறிப்புகளையும் எடுத்துரைத்தார். புள்ளியியல் துறை பேராசிரியர் பி.பாண்டியன்  நன்றி தெரிவித்தார். முன்னதாக, பேராசிரியர்கள் எஸ்.பிரகதீஸ்வரன், கே.ராஜாமோகன், டி.சபேசன், வி.அன்பானந்தன், எஸ்.சஞ்சய்காந்தி, ஆர்.ஜெயசங்கர், கே.சிவக்குமார், ஆர். உதயக்குமார், சிதம்பரத்தை சேர்ந்த  எஸ்.வி.ஏ.கோகுலகிருஷ்ணன், ஜி.சரவணன் ஆகியோர் சுவாமி விவேகானந்தரின் உருவப் படத்துக்கு  மலரஞ்சலி செலுத்தினர். விழாவில் சுமார் 1,300 பேர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com