அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை

கடலூர் மாவட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.


கடலூர் மாவட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுகவினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். நகர செயலர் ஆர்.குமரன் தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் கோ.அய்யப்பன், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் முருகுமணி, பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலர் ஜி.ஜெ.குமார், மீனவரணி மாவட்ட செயலர் தங்கமணி, பேரவை நகரச் செயலர் வ.கந்தன், முன்னாள் கவுன்சிலர்கள் ஆர்.வி.மணி, அன்பு, தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல திமுவினர் நகரச் செயலர் கே.எஸ்.ராஜா தலைமையில் ஊர்வலமாக வந்தனர். தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு, பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், நகர்மன்ற முன்னாள் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், மாணவரணி எஸ்.பி.நடராஜன், அகஸ்டின் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் நகரச் செயலர் வினோத்ராஜ் தலைமையில் வந்தனர். மாவட்ட அவைத் தலைவர் டி.ஜி.எம்.ராமலிங்கம், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில மருத்துவரணி துணைச் செயலர் பழனிவேல்ராஜன், ஒன்றியச் செயலர்கள் ராயல், செந்தில், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு அமமுக சார்பில் நகரச் செயலர் கோலாசெல்வராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அவைத் தலைவர் எம்.சாலிஹ், பொருளாளர் ஜாபர்அலி, தர்மலிங்கம், அக்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல வழக்குரைஞர்கள் அணி சார்பில் மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் மாலை அணிவித்தார்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் வண்டிகேட்டில் உள்ள அண்ணா சிலைக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலர் பு.தா.இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலர் தேன்மொழி, தலைமைக் கழகப் பேச்சாளர் தில்லைகோபி, ஒன்றியச் செயலர் அசோகன், அவைத் தலைவர்கள் ராசாங்கம், சுந்தரமூர்த்தி, பால்வளத் தலைவர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் கருப்பு ராஜா, வேம்பு, ராஜேந்திரன், சீத்தாராமன், ஏ.டி.என்.முத்து, சிவசிங்காரவேல், சக்திவேல், சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பண்ருட்டி: பண்ருட்டியில் அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தலைமையில், நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம் முன்னிலையில் அந்தக் கட்சியினர் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து, நான்கு முனைச் சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினார். மாவட்ட பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக நகரச் செயலர் முருகன் தலைமையில், முன்னாள் மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன் முன்னிலையில் அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அண்ணாகிராமம் ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றியச் செயலர் என்.டி.கந்தன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் ஜானகிராமன், முன்னாள் தொகுதிச் செயலர் ராமசாமி உள்ளிடோர் திருமலை நகரில் அமைச்சர் எம்.சி.சம்பத் அலுவலகம் அருகே அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்தனர்.
அமமுக நகரச் செயலர் சக்திவேல் தலைமையில், அவைத் தலைவர் குமார், பொருளாளர் ஆண்ரூபால் ஆகியோர் முன்னிலையில் பலர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திமுக நகரச் செயலர் கே.ராஜேந்திரன் தலைமையில், கடலூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் கே.நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலையில் அந்தக் கட்சியினர் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து ஊர்வலமாக வந்து நான்கு முனைச் சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட துணைச் செயலர் தணிகைசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் கவுன்சிலர் ஏ.சிவா தலைமையில், முன்னாள் கவுன்சிலர்கள் சோழன், சங்கர் உள்ளிட்டோர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நெய்வேலி: நெய்வேலி வட்டம் 9-இல் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு அதிமுக நகரச் செயலர் கோவிந்தராஜ் தலைமையில், அவைத் தலைவர் க.வெற்றிவேல் முன்னிலையில், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க பொருளாளர் யு.தேவானந்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், நெய்வேலி நகரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தொமுச அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், வட்டம் 30-இல் கட்சி கொடியேற்றினார். இந்த நிகழ்வுகளில் நகர பொறுப்புக் குழு தலைவர் பக்கிரிசாமி, தொமுச தலைவர் வீரராமச்சந்திரன், செயலர் சுகுமார், பொருளாளர் குருநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com