சிறுப்பாக்கத்தில் புதிய துணை மின் நிலையம்: முதல்வர் தொடக்கி வைத்தார்

சிறுப்பாக்கத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை


சிறுப்பாக்கத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.
சிறுப்பாக்கத்தைச் சுற்றியுள்ள வள்ளிமதுரம், பனையாந்தூர், அரசங்குடி, எஸ்.புதூர் உள்ளிட்ட 25 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறுப்பாக்கத்தில் ரூ.4 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த மின் நிலைய கட்டுமானம் மற்றும் மின் இணைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதனை பயன்பாட்டுக்கு அர்பணிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலமாக புதிய துணை மின் நிலையத்தை தொடக்கி வைத்தார். இதையொட்டி, துணை மின் நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு திட்டக்குடி செயற்பொறியாளர் சரவண துரைமோகன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் குமரேசன், பாரதி
ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, சிறுப்பாக்கம் உதவி பொறியாளர் தர்மலிங்கம் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com