இலங்கை தமிழர்கள் உயிரிழப்புக்கு காங்கிரஸ் காரணமல்ல: புதுவை முதல்வர் வே.நாராயணசாமி

இலங்கையில் தமிழர்கள் உயிரிழப்புக்கு காங்கிரஸ் கட்சி காரணமல்ல என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.
இலங்கை தமிழர்கள் உயிரிழப்புக்கு காங்கிரஸ் காரணமல்ல: புதுவை முதல்வர் வே.நாராயணசாமி

இலங்கையில் தமிழர்கள் உயிரிழப்புக்கு காங்கிரஸ் கட்சி காரணமல்ல என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.
 கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா கடலூரில் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுவை முதல்வர் வே.நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுவாழ்வில் இருப்பவர்கள் மற்றவர்களின் கருத்துகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் பொருளாதாரம் தற்போது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
 தமிழகத்திலேயே கடலூரில்தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெயை சுத்திகரித்து அதில் கிடைக்கும் பெட்ரோலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது லிட்டருக்கு ரூ.34 மட்டுமே விற்பனை செய்கிறோம். இவ்வாறு, கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு அபகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரியால் பல தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், மோடிக்கும் மக்கள் மிகப் பெரும் பாடத்தைக் கற்பிப்பர்.
 இலங்கையில் தமிழர்கள் உயிரிழப்புக்கு காங்கிரஸ் காரணமல்ல. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் எங்களுக்கு வருத்தம் இருந்தது. ஆனால், இந்த விஷயத்தில் ராகுல்காந்தி தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டேன். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர்.
 அப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com