எள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு  தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை

குறிஞ்சிப்பாடி வட்டாரப் பகுதிகளில் எள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் அறிவியல்

குறிஞ்சிப்பாடி வட்டாரப் பகுதிகளில் எள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் புதன்கிழமை தொழில்நுட்பம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
குறிஞ்சிப்பாடி   வட்டம், அயன்குறிஞ்சிப்பாடி கிராமம் வடக்கு பகுதி விவசாயிகளுக்கு விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் மோதிலால் ஆலோசனையின் பேரில், டி.எம்.வி.7 என்ற வீரிய ரக எள் விதைகள் வழங்கப்பட்டன. விவசாயிகள் எள் விதைகளைப் பெற்று புதுமையான தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து சுமார் 40 ஏக்கரில் பயிரிட்டுள்ளனர். அந்த வயல்களை நிலக்கடலை ஆராய்ச்சி இயக்ககத்தைச் சேர்ந்த இனாயத், முனைவர் முரளிதரன், ச.அரிசுதன் (உழவியல்),விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர்  ச.சரிசுதன் (உழவியல்), தனியார் நல்லெண்ணெய் நிறுவன இயக்குநர் ராஜூ விக்னேஷ், பயிற்சியாளர் மனோகரன் உள்ளிட்டோர் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப சார்ந்த ஆலோசனைகளை வழங்கினர். முன்னோடி விவசாயிகள் குப்புசாமி, பழநிவேலு, ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com