கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 32,447 வாக்காளர்கள்

கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 32,477 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 32,477 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப். 18- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான   ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வந்தன. அதன்படி, மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 20,36,076 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
புதிய வாக்காளர்களைச் சேர்க்க நடத்தப்பட்ட முகாம்கள் மூலமாக இளம் வாக்காளர்கள், பல்வேறு காரணங்களுக்காக இடம் மாறியவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய விசாரணைக்குப் பின்னர் தகுதியானவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அவ்வாறு சேர்க்கப்பட்டவர்களைக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்தது. அந்தப் பட்டியலின்படி, கடலூர் மாவட்டத்தில் தற்போது 20,68,523 வாக்காளர்கள் உள்ளனர். 
இது கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலை விட 32,447 கூடுதலாகும். 
இந்தப் பட்டியலில், பெண்கள் வாக்காளர்களாக 18,297 பேர் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, ஆண்களில் 14,132 பேரும், இதரர் பிரிவில் 18 பேரும் கூடுதலாக இணைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, கடலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 13,63,650 வாக்காளர்கள் உள்ளனர். கூடுதலாக 21,320 பேர் இணைந்துள்ளனர். இவர்களில் ஆண்கள்- 6,73,660 பேர், பெண்கள்- 6,89,899 பேர், இதரர் 91 பேர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியைப் பொருத்த வரையில், கடலூர் மாவட்டத்தில் உள்ளடங்கிய சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில்  (தனி) தொகுதிகளில் மொத்தம் 7,04,873 பேர் உள்ளனர். கடந்த பட்டியலின் போது 6,93,756 பேர் இடம் பெற்றிருந்தனர். தற்போது கூடுதலாக 11,117 வாக்காளர்கள் இந்தப் பட்டியலில் கூடுதலாக இணைந்துள்ளனர். இவர்களில், ஆண்கள் - 3,50,735, பெண்கள் - 3,54,096, இதரர் 42 பேர்.
9 சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளர் பட்டியல் விவரம் வருமாறு:
1. திட்டக்குடி (தனி) தொகுதி: ஆண்கள் - 1,05,353, பெண்கள் - 1,08,605, இதரர் - 2. மொத்தம் - 2,13,960 பேர். 
2. விருத்தாசலம் தொகுதி: ஆண்கள் - 1,21,564, பெண்கள் - 1,20,803, இதரர் - 14. மொத்தம் -  2,42,381 பேர்.
3. நெய்வேலி தொகுதி: ஆண்கள் - 1,05,784, பெண்கள் - 1,04,515,  இதரர் - 14. மொத்தம் - 2,10,313 பேர்.
4. பண்ருட்டி தொகுதி: ஆண்கள் - 1,16,172, பெண்கள் - 1,21,264, இதரர் - 16. மொத்தம் - 2,37,452 பேர்.
5. கடலூர் தொகுதி: ஆண்கள் - 1,09,907, பெண்கள் - 1,17,945, இதரர் - 30. மொத்தம் - 2,27,882 பேர்.
6. குறிஞ்சிப்பாடி தொகுதி: ஆண்கள் - 1,14,880, பெண்கள் - 1,16,767, இதரர் - 15. மொத்தம் - 2,31,662 பேர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டது...
7. புவனகிரி தொகுதி: ஆண்கள் - 1,21,893, பெண்கள் - 1,22,185, இதரர் - 16. மொத்தம் - 2,44,094 பேர்.
8. சிதம்பரம் தொகுதி:  ஆண்கள் - 1,17,822, பெண்கள் - 1,21,838, இதரர் - 14. மொத்தம் - 2,39,674 பேர்.
9. காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதி: ஆண்கள் - 1,11,020, பெண்கள் - 1,10,073, இதரர் - 12. மொத்தம் - 2,21,105 பேர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com