காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்காளர்களுக்கான எலிப் பொறி: பாஜக

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்காளருக்கான எலிப் பொறி என மாநில பாஜக பிரசார அணிச் செயலர் வே.ராஜரத்தினம் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்காளருக்கான எலிப் பொறி என மாநில பாஜக பிரசார அணிச் செயலர் வே.ராஜரத்தினம் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக அரசு நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்பிய நிலையில், சி.பி.எஸ்.சி. மாணவர்கள் சார்பாக, நீட் தேர்வு அவசியம் என வாதிட்டவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நளினி சிதம்பரம். அப்போது, தமிழக காங்கிரஸார் வழக்குரைஞராகப் பணிபுரிவது வேறு; கட்சி வேறு என்று கூறி ப.சிதம்பரத்தின் குடும்பத்துக்கு வக்காலத்து வாங்கினர்.
தற்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் ப.சிதம்பரம். காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை வாக்காளர்களுக்கான எலிப் பொறி. அதை நம்பிச் சென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பாஜக தேர்தல் அறிக்கை இன்னும் சில நாள்களில் வெளியாகும். அப்போது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெற்று வார்த்தைகள் என்பதை மக்கள் உணர்வர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com