கல்வித் தொலைக்காட்சி நிகழ்வு: அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு

வடலூர், புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான காட்சிகள் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டன.

வடலூர், புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான காட்சிகள் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டன.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில், "மணி ஓசை' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சியில் தினமும் ஒரு பள்ளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. கல்வி தொலைக்காட்சியின் அலைவரிசை எண்-200. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தொலைக்காட்சி குழுவினர் படம்பிடித்து, படிப்படியாக ஒளிபரப்ப உள்ளனர். 
இதில், முதல் கட்டமாக வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டன . இந்த நிகழ்வை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கலாவதி தொடக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் திருமுருகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர், அரிமா சங்கம், வர்த்தக சங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பங்கேற்று,  பள்ளியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேட்டியளித்தனர். இதில், மாணவர்களின் சிலம்பாட்டம், பாட்டு பாடுதல் உள்ளிட்ட தனித் திறன்கள் பதிவு செய்யப்பட்டன.  நிகழ்வுகளை கல்வி தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் சின்னப்பராஜ், விஜய்பிரட்ரிக், ஜான்ராஜா ஆகியோர் ஒளிப் பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com