சுவர் இடிந்து நகராட்சி தொழிலாளி பலி
By DIN | Published On : 14th April 2019 12:24 AM | Last Updated : 14th April 2019 12:24 AM | அ+அ அ- |

கடலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (45). கடலூர் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் சனிக்கிழமை முதுநகர் சிங்காரத்தோப்புப் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் அருகே குப்பைகளை சேகரித்தபோது திடீரென அந்தச் சுவர் இடிந்து பழனிச்சாமி மீது விழுந்தது.
இதில், பலத்த காயமுற்ற அவரை அந்தப் பகுதியினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த பழனிச்சாமியின் மனைவி உடல் நலக் குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.