சுடச்சுட

  

  தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பண்ருட்டி திருவதிகையில் உள்ள பக்தவீரஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகையில் பழைய கடலூர் பிரதான சாலையில் வலம்புரி விநாயகர், பக்தவீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. பழைமையான இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று லட்ச தீப திருவிழா நடைபெறுவது வழக்கம்.
  அதன்படி, ஞாயிற்றுக்கிழமை லட்ச தீப திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 10 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம், மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தவீர ஆஞ்சநேயர் காட்சியளித்தார் . மாலை 5.30 மணியளவில் லட்சதீப வைபவம் நடைபெற்றது. 
  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு  வழிபாடு நடத்தினர். இரவு 7 மணியளவில் சர்வ அலங்காரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. பக்த ஆஞ்நேயர் தலைப்பில் உபன்யாசமும் நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் 16-ஆவது வார்டு திருவதிகை நகரவாசிகள் செய்திருந்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai