சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 4,500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறியதாவது: தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணியுடன் தங்களது பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். 
  அதன்பின்னர் எந்த வகையிலும் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது. வாக்குப் பதிவு நாளில் வாக்குச் சாவடிகளிலிருந்து 200 மீட்டருக்குள் எந்த ஒரு பிரசாரமும் செய்யக்கூடாது. 
  மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 4,500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 42 இருசக்கர வாகனங்கள் மூலம் கிராமப்புறங்களை கண்காணித்திட காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai