சுடச்சுட

  

  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்:  இருளர் இன மக்களிடம் விழிப்புணர்வு

  By DIN  |   Published on : 16th April 2019 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்து இருளர் இன மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
  சிதம்பரம் அருகே உள்ளது சி.மானம்பாடி கிராமம். இங்குள்ள இருளர் குடியிருப்பில் சுமார் 26 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமலும், வாக்காளர் அடையாள அட்டை பெறாமலும் வாழ்ந்து வந்தனர். இவர்களின் குழந்தைகள் கல்வி அறிவு இல்லாமல் இருந்தனர். சாதி சான்றிதழும் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 
  இந்த நிலையில், அடிப்படை வசதிகள், வாக்குரிமை தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வனிடம் அந்தப் பகுதி மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து இருளர் இன மக்களுக்கு தற்காலிக இடவசதி, அவர்களின் குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையம் அமைத்து தரப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் இந்தப் பகுதியைச் சேர்ந்த 60 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ளது. 
  மேலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் டி.பழனி தலைமையில், தேர்தல் பிரிவு அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் சசிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் விஜயரகுநாதன் ஆகியோர் இந்தப் பகுதி மக்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்து பயிற்சி அளித்தனர். மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai