சுடச்சுட

  

  கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் காசி.தங்கவேல் செவ்வாய்க்கிழமை மாலை திருப்பாதிரிபுலியூர் சன்னதி தெருவில் தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார் . 
   அவரை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து வேட்பாளர் பேசுகையில், தான் வெற்றி பெற்றால் கடலூர் தொகுதியில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து விளக்கினார். 
  நிகழ்ச்சியில், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் சோழன் சம்சுதீன், மாவட்ட அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், தணிக்கையாளர் சுந்தரமூர்த்தி, கடலூர் நகரச் செயலர் வி.கே.முத்துகுமரன், ஒன்றியச் செயலர்கள் ஜி.எஸ்.செந்தில்குமார், ஜி.வி.தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai