சுடச்சுட

  

  சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து, திராவிடர் கழகம் சார்பில் சேத்தியாத்தோப்பில் பிரசார பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
  கூட்டத்துக்கு மாவட்ட தி.க. தலைவர் பூ.சி.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் அன்பு சித்தார்த்தன், இணைச் செயலர் யாழ்.திலீபன், அமைப்பாளர் கு.தென்னவன், துணைத் தலைவர் பெரியார்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் பா.ராஜசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் பிரசார செயலர் அ.அருள்மொழி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: 
  பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகள், நடுத்தர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார் அவர். 
  திமுக எம்எல்ஏ துரை.கி.சரவணன், சேத்தியாத்தோப்பு திமுக நகரச் செயலர் பா.மனோகரன், ஒன்றியச் செயலர் ரா.தில்லை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பூபாலன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வீரசோழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக தொல்.திருமாவளவன் வாக்கு கேட்டு உரையாற்றினார். மாவட்ட திக மகளிரணி தலைவர் சுமதி பெரியார்தாசன் நன்றி கூறினார். முன்னதாக கீரப்பாளையம் கடை வீதியில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் அ.அருள்மொழி பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai