Enable Javscript for better performance
பிளஸ் 2 தேர்வு முடிவு: நம்பிக்கை அளிக்கும் அரசுப் பள்ளிகள்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பிளஸ் 2 தேர்வு முடிவு: நம்பிக்கை அளிக்கும் அரசுப் பள்ளிகள்!

    By DIN  |   Published On : 22nd April 2019 02:13 AM  |   Last Updated : 22nd April 2019 02:13 AM  |  அ+அ அ-  |  

    பிளஸ் 2 தேர்வு முடிவில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் அதிக மாணவர்களை வெற்றிபெறச் செய்துள்ளன. 
    தமிழகம், புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 
    பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், தமிழகம் 91.30 சதவீதம் தேர்ச்சியைப் பதிவு செய்தது. அதிகமான தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றது. வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்கள் வழக்கம்போல கடைசி 10 இடங்களிலேயே தங்களது இருப்பை தக்க வைத்துள்ளன. எனினும், தேர்வு எழுதியவர்களில் அதிகமானோரை அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்வு எழுத வைத்த பெருமை விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களையே சேரும்.
    விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தேர்வு எழுதிய 39,698 மாணவ, மாணவிகளில் 25,794 பேர் 174 அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதினர். இது தேர்வு எழுதிய மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையில் 64.97 சதவீதமாகும். அதேபோல, அரசுப் பள்ளிகளில் பயின்ற 20,993 பேர் தேர்ச்சி பெற்று 81.15 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.
    இதற்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து தேர்வு எழுதிய 27,481 பேரில் 17,770 பேர் 134 அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதினர். இது 64.66 சதவீதமாகும். தேர்ச்சிப் பெற்ற மொத்த மாணவர்களில் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் 14,918 பேர்களாவர். இது தேர்ச்சியில் 61.66 சதவீதமாகும். அரசுப் பள்ளியிலிருந்து தேர்வு எழுதியவர்களில் 83.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
    கடலூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 30,015 பேர் தேர்வு எழுதியதில் 26,548 பேர் தேர்ச்சிப் பெற்றனர். இதில், 12,986 பேர் 101 அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வை எழுதியுள்ளனர். 
    இதில், 10,499 பேர் தேர்ச்சிப் பெற்று 80.85 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.  கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து 409 அரசுப் பள்ளிகள் மூலமாக மொத்தம் 56,650 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில்  சுமார் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று 81.96 சதவீத தேர்ச்சியை பதிவுசெய்தனர். 
    புதுவை: இதேபோல, புதுவை மாநிலத்தில் மொத்தம் 12,807 பேர் பிளஸ்2 தேர்வு எழுதியதில் 11,683 பேர் தேர்ச்சி பெற்று 91.22 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்தனர். அதே நேரத்தில் 43 அரசுப் பள்ளிகள் மூலமாக 5,311 பேர் தேர்வு எழுதியதில் 4,313 பேர் தேர்ச்சி பெற்று 81.21 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp