பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
By DIN | Published On : 27th April 2019 07:00 AM | Last Updated : 27th April 2019 07:00 AM | அ+அ அ- |

நெய்வேலியில் பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி 5-ஆவது வட்டம், 1-ஆவது வகை குடியிருப்பில் வசிப்பவர் ராமலிங்கம். என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அஞ்சலை (51). இவர் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல தந்தை பெரியார் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த இருவர் அஞ்சலையை மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடக்குத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.