முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
ஆற்காடு லுத்ரன் திருச்சபை தேர்தல்
By DIN | Published On : 04th August 2019 12:46 AM | Last Updated : 04th August 2019 12:46 AM | அ+அ அ- |

கடலூர் ஆற்காடு லுத்ரன் திருச் சபைக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான ஆற்காடு லுத்ரன் திருச்சபை கடலூர் மாவட்டத்தில் வலிமையான திருச்சபையாக செயல்பட்டு வருகிறது.
இந்தச் திருச்சபைக்கு ஏராளமான ஆலயங்களும், சொத்துக்களும் உள்ளன. திருச்சபையின் பேராயர் தலைவர் மற்றும் ஆளுங்குழுவினர் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதன்படி, 2019-22- ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் கடலூரில் உள்ள ஆற்காடு லுத்ரன் திருச்சபை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பேராயர் தலைவர், துணைத் தலைவர், போதகர்கள், திருச்சபை பணியாளர்கள், திருச்சபை சாராத பணியாளர்கள் ஆகிய 31 பதவிகளுக்கான தேர்தலில் 70 பேர் போட்டியிட்டனர். இவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் 966 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், 960 பேர் தங்களது வாக்கைச் செலுத்தினர்.
தேர்தலில் 3 பிரிவினர் போட்டியிட்டதால் வாக்குப் பதிவின்போது இருதரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.