முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கோயிலில் உண்டியல் திருட்டு
By DIN | Published On : 04th August 2019 12:46 AM | Last Updated : 04th August 2019 12:46 AM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே காளியம்மன் கோயில் கதவை உடைத்து உண்டியல்களை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி வட்டம், மானடிக்குப்பம் கிராமத்தில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பூசாரியாக அதே பகுதியைச் சேர்ந்த தனவேல் உள்ளார். ஆடி மாதம் வெள்ளிக்கிழமையன்று கோயிலில் திரளானோர் வழிபாடு செய்தனர். பின்னர், அன்று இரவு வழக்கம்போல் பூசாரி தனவேல் கோயிலை பூட்டிச் சென்றார்.
சனிக்கிழமை காலையில் மீண்டும் கோயிலுக்கு வந்தவர், கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த இரண்டு உண்டியல்களை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.