ஆற்காடு லுத்ரன் திருச்சபை  தேர்தல் முடிவுகள் அறிவிப்பு

ஆற்காடு லுத்ரன் திருச்சபைக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

ஆற்காடு லுத்ரன் திருச்சபைக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 
கடலூர் உள்பட தென்னாற்காடு மாவட்டத்தை உள்ளடக்கிய கிறிஸ்தவ மதத்தின் சபையாக ஆற்காடு லுத்ரன் திருச்சபை செயல்பட்டு வருகிறது. இந்த திருச்சபையின் பேராயர் தலைவர், ஆளுங்குழு நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து 2019-22-ஆம் ஆடுகளுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடலூரில் உள்ள ஆற்காடு லுத்ரன் திருச்சபை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 31 பதவிகளுக்கான தேர்தலில் 70 பேர் போட்டியிட்டனர். வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 966 பேரில் 960 பேர் தங்களது வாக்கைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் 3 அணியினர் போட்டியிட்ட நிலையில் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில், "புதுரசம் புது துருத்தி' என்ற பெயரில் செயல்பட்ட அணியினர் 31 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, பேராயர் தலைவராக அருள்திரு. வே.சாமுவேல்கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் த.கிருபாரட்சண்ய விஜயன், துணைத் தலைவராக (பதிலி) தே.ஜெயகரன் கிறிஸ்டோபர், போதகர்களாக பா.பெஞ்சமின்சுதாகர், ஜோ.கிறிஸ்டோபர் ஜெபராஜ், அ.ஜேன்அனித்தா இளவரசி, ஆ.சாமுவேல், சி.செல்வராஜ், எஸ்.ஸ்டீபன் பிரபாகரன், பதிலி போதகர்களாக த.ஜான்இன்பராஜ், அ.ஜான்பிரசன்னகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும்,  திருச்சபை பணியாளர்கள், திருச்சபை சாரா பணியாளர்களிலும் இந்த அணியினரே வெற்றி பெற்றனர். அவர்களிடம் பழைய நிர்வாகிகள் தங்களது பொறுப்புகளை ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com